சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் முதல்வர் பழனிசாமி!

சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் முதல்வர் பழனிசாமி!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சற்று முன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை தேர்தல் பிரச்சாரம் செய்த எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு குடலிறக்கம் இருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இதனையடுத்து அவருக்கு குடலிறக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதால் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து இன்று சற்று முன்னர் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு சில மருத்துவ சோதனைகள் எடுத்த பின்னர் குடல் அறுவை சிகிச்சைகள் செய்யப்படும் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதை அடுத்து அந்த மருத்துவமனை முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டிற்கு வந்துள்ளது என்பதும் அந்த மருத்துவமனைக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com