10 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்திய பெங்களூரு: படிக்கல் அபார சதம்

10 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்திய பெங்களூரு: படிக்கல் அபார சதம்

நேற்று நடைபெற்ற பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி ராஜஸ்தான் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. மிக அபாரமாக விளையாடிய படிக்கல் சதமடித்து அசத்தியதோடு ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து ராஜஸ்தான் அணியை பேட்டிங் செய்ய களமிறங்கிய நிலையில் அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் எடுத்தது. அதன்பின் 178 என்ற இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரரான விராட் கோஹ்லி மற்றும் படிக்கல் ஆகிய இருவருமே ஆட்டத்தை முடித்து விட்டனர். விராட் கோலி 72 ரன்கள் அடித்தார், படிக்கல் மிக அபாரமாக விளையாடி சதம் அடித்தார். இதனையடுத்து படிக்கல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பெங்களூரு அணி மீண்டும் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்து விட்டது என்பதும், இருப்பினும் சென்னை அணி இரண்டாவது இடத்தில் இருந்தாலும் ரன்ரேட்டில் பெங்களூர் அணியை விட அதிகமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று பஞ்சாப் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com