நாடு முழுவதும் இன்று கோலாகலமாக பக்ரீத் கொண்டாட்டம்!

நாடு முழுவதும் இன்று கோலாகலமாக பக்ரீத் கொண்டாட்டம்!

பக்ரீத் பண்டிகை இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஹஜ் பெருநாள் என்றும், தியாக திருநாள் என்றும் அழைக்கப்படும் பக்ரீத் பண்டிகை இன்று நாடு முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்களால் கொண்டாடப்படுகிறது.

நாடுமுழுவதும் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. புத்தாடை உடுத்தி ஏழை எளிய மக்களுக்கு இறைச்சியை தானம் செய்யும் நாளாக இஸ்லாமிய சகோதரர்கள் கொண்டாடிவருகின்றனர். பக்ரீத் பண்டிகையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்களால் சிறப்புத்தொழுகை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை,திருச்சி,விருதுநகர், திருவாரூர், நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.அதேபோல் உலக புகழ்பெற்ற நாகூர் தர்கா உள்ளிட்ட பல்வேறு மசூதிகளில் இஸ்லாமியர்களின் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது. அதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து அரசியல் தலைவர்களும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.

இதையொட்டி மசூதிகள் உள்பட பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மசூதிகளில் சிறப்பு தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி அன்பை வெளிப்படுத்தினர். பக்ரீத் நாளில் ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற விலங்குகளை குர்பானி கொடுக்கும் இஸ்லாமியர்கள், அவற்றின் இறைச்சியை ஏழைகள், நண்பர்களுக்கு பகிர்ந்தளிப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com