‘நான் வெறும் பவுலர் இல்லடா… ஆல்ரவுண்டர்டா..!’-சதம் விளாசி கெத்து காட்டிய அஷ்வின்!

‘நான் வெறும் பவுலர் இல்லடா… ஆல்ரவுண்டர்டா..!’-சதம் விளாசி கெத்து காட்டிய அஷ்வின்!

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் சதமடித்து மாஸ் காட்டியுள்ளார் சுழற் பந்து வீச்சாளர் அஷ்வின். இந்தப் போட்டியின் முன்னதாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார் அஷ்வின். இந்நிலையில் சதம் விளாசி மாபெரும் சாதனையை நிகழ்த்திக் காட்டியுள்ளார்.

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி, சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது. ஆட்டத்தின் மூன்றாவது நாள் போட்டி இன்று நடந்து வருகிறது. இந்திய அணி, தனது இரண்டாவது இன்னிங்ஸை இதில் விளையாடி வருகிறது. நேற்று வரை இந்தியாவுக்குச் சாதகமாக இருந்த இந்தப் போட்டி இன்று காலை இங்கிலாந்துக்குச் சாதகமாக மாறியது. அதற்கு காரணம், இன்று காலை போட்டித் தொடங்கியது முதல் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது தான்.

அதே நேரத்தில் இடையில் ஜோடி சேர்ந்த கேப்டன் விராட் கோலி மற்றும் அஷ்வின், பார்ட்னர்ஷிப் மூலம் 100 ரன்களுக்கு மேல் சேர்த்தனர். கோலி அரைசதம் அடித்தப் பின்னர் அவுட்டான நிலையில், அஷ்வின் நிலைத்து ஆடி சதம் விளாசியிருக்கிறார். ஒரே போட்டியில் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சதமும் விளாசி வேற லெவல் சாதனையை அஷ்வின் நிகழ்த்தியுள்ளார். இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெறவே வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com