‘சூரரைப் போற்று’ படம் பார்த்த ரஹானே- சூர்யாவை எப்படி பாராட்டினார் தெரியுமா?

‘சூரரைப் போற்று’ படம் பார்த்த ரஹானே- சூர்யாவை எப்படி பாராட்டினார் தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவர் அஜிங்கியா ரஹானே. கேப்டன் விராட் கோலி இல்லாத சமயங்களில் இந்திய கிரிக்கெட் அணியைத் திறம்பட வழிநடத்தும் ரஹானே, பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறார்.

குறிப்பாக சமீபத்தில் கோலி இல்லாத காலத்தில், இந்திய அணியை வலுவான ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வழிநடத்தி, டெஸ்ட் தொடரை 2- 1 எனக் கைப்பற்றினார். இதனால் அவரது புகழ் உச்சத்துக்கே சென்றுள்ளது.

தற்போது இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் ஆரம்பமாக உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி, சென்னையில் தொடங்குகிறது. இதனால் இந்திய மற்றும் இங்கிலாந்து வீரர்கள் சென்னையில் முகாமிட்டு உள்ளனர்.

இப்படி சென்னை வந்துள்ள ரஹானேவிடம் ஒரு ரசிகர், 'வெல்கம் டூ சென்னை. தமிழில் எதாவது திரைப்படமோ சீரிஸோ பார்த்துள்ளீர்களா?' என இன்ஸ்டா மூலம் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு ரஹானே, சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற 'சூரரைப் போற்றும்' படத்தைப் பார்த்ததாகக் கூறி ஆச்சரியப்பட வைத்தார்.

ரஹானே, 'நான் தமிழ்ப் படம் பார்த்திருக்கிறேன். சமீபத்தில் சூரரைப் போற்றுப் படத்தை சப்டைட்டில்களுடன் பார்த்தேன். எனக்கு அது மிகவும் பிடித்திருந்தது. நடிகர் சூர்யா பிரில்லியன்டாக நடித்திருந்தார்' எனப் புகழாரம் சூட்டினார். இது தமிழ் மக்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஹானேவின் ரிப்ளையும் வைரலாகி உள்ளது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com