அதிமுகவில் இணைகிறாரா சசிகலா? கருத்துக்கணிப்பால் திடீர் மாற்றம்?

அதிமுகவில் இணைகிறாரா சசிகலா? கருத்துக்கணிப்பால் திடீர் மாற்றம்?

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் அதிமுக, திமுக உள்ளிட்ட ஐந்து கூட்டணிகள் போட்டியிடுகின்றன. இந்த கூட்டணியில் அதிமுகவின் வாக்குகளை கணிசமாக தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி பிரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால்தான் இதுவரை வந்த கருத்து கணிப்புகளில் அதிமுக தோல்வி அடையும் என்று ரிசல்ட் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் சேலம் சென்ற ஓபிஎஸ் முதல்வரை சந்தித்து சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்தும் அமமுகவை அதிமுகவில் இணைப்பது குறித்தும் ஆலோசனை நடத்தினார்.

இந்த இணைப்பு நடந்தால் மட்டுமே தேவர் சமுதாயம் உள்ளிட்ட வாக்குகள் பிரியாது என்றும் அதிமுகவின் வாக்குகள் அப்படியே இருக்கும் என்றும் இதனால் கூடுதல் தொகுதிகளை பெற முடியும் என்றும் ஆலோசித்ததாக தெரிகிறது.

இதனை அடுத்து சசிகலாவை கட்சியில் சேர்க்க ஓபிஎஸ் மற்றும் ஜிபிஎஸ் ஒப்புக்கொண்டதாகவும் மற்றும் அமமுகவையும் அதிகவில் இணைக்க ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இருவரும் ஒப்புக் கொண்டதாகவும் தெரிகிறது. இதனை அடுத்து அமமுக வேட்பாளர்கள் அனைவரும் தேர்தலில் இருந்து விலகுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இது நடந்தால் மீண்டும் அதிமுக ஆட்சியை கைப்பற்றுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com