குஷ்புவுக்கு ஆதரவு அளித்த அடுத்த நாளே மூச்சுத்திணறல்: மருத்துவமனையில் நடிகர் கார்த்திக்

குஷ்புவுக்கு ஆதரவு அளித்த அடுத்த நாளே மூச்சுத்திணறல்: மருத்துவமனையில் நடிகர் கார்த்திக்

நடிகர் கார்த்திக் நேற்று குஷ்புவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன் என்று கூறிய நிலையில் இன்று அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாஜக சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் நடிகை குஷ்புவுக்கு ஆதரவு தருவேன் என்றும் அவருடைய வெற்றிக்கு ஆயிரம் விளக்கு தொகுதி முழுவதும் பிரச்சாரம் செய்வேன் என்றும் நேற்று சென்னையில் நடிகர் கார்த்திக் பேட்டி அளித்தார்.

மேலும் தன்னுடைய மக்கள் உரிமை கட்சி, பாஜக உடன் கூட்டணி வைத்துள்ளதாகவும் பாஜக தனது ராஜ்யசபா பதவி கொடுத்தால் ஏற்றுக் கொள்வேன் என்றும் அந்த பதவி மூலம் மக்களுக்கு தேவையானதை செய்வேன் என்றும் ராஜ்யசபாவில் மக்களின் பிரச்சனைகளுக்காக குரல் கொடுப்பேன் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இன்று திடீரென நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. நடிகர் கார்த்திக் அவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும், இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. மூச்சு திணறல் காரணமாக கார்த்திக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது குறித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com