கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறிய பதஞ்சலி நிறுவன ஊழியர்களுக்கு கொரோனா!

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறிய பதஞ்சலி நிறுவன ஊழியர்களுக்கு கொரோனா!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் உச்சத்தில் உள்ளது என்பதும் கடந்த 24 மணிநேரத்தில் 3.3 லட்சத்திற்கும் மேல் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக பதஞ்சலி நிறுவனம் அறிவித்தது. ஆனால் அதனை நீதிமன்றம் ஏற்கவில்லை. இந்த நிலையில் தற்போது கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறிய பதஞ்சலி நிறுவனத்தின் ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

உத்தரகாண்ட் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் இயங்கி வரும் பதஞ்சலி நிறுவனத்தின் ஆலைகளில் பணியாற்றும் 83 பேர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரொனில் என்ற பெயரில் பதஞ்சலி நிறுவனம் கொரோனாவுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மருந்தை உருவாக்கி விற்பனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கொரோனாவுக்கு மருந்து விற்பனை செய்யும் நிறுவனத்தின் ஊழியர்கள் 83 பேருக்கு கொரோனா தொற்றுஉருவாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் கொரொனில் மருந்தை ஏன் பதஞ்சலி நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு கொடுக்கவில்லை என்ற கேள்வி தற்போது எழுந்து வருகிறது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com