131 ரன்களுக்கு சுருண்ட மும்பை: பஞ்சாப் அணிக்கு வெற்றிவாய்ப்பு அதிகம்?

131 ரன்களுக்கு சுருண்ட மும்பை: பஞ்சாப் அணிக்கு வெற்றிவாய்ப்பு அதிகம்?

இன்று நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 17வது போட்டியில் பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் மோதி வருகின்றன.

இன்றைய போட்டியில் பஞ்சாப் கேப்டன் கே.எல் ராகுல் டாஸ் வென்றதை அடுத்து மும்பை அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான டீகாக் 3 ரன்னில் அவுட் ஆன போதிலும் கேப்டன் ரோகித் சர்மா மிக அபாரமாக விளையாடி 63 ரன்கள் அடித்தார். அதேபோல் சூரியகுமார் 33 ரன்கள் அடித்தார்.

ஆனால் அதன்பின் களமிறங்கிய வீரர்கள் சொதப்பியதால் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் மட்டுமே மும்பை அணி எடுத்து உள்ளது. இதனை அடுத்து பஞ்சாப் அணி இன்னும் ஒரு சில நிமிடங்களில் 132 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாட உள்ளது.

இன்றைய போட்டியில் பஞ்சாப் அணி கவனமாக விக்கெட் இழப்பின்றி விளையாடினால் கண்டிப்பாக வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளதாக கிரிக்கெட் வர்ணனையாளர் தெரிவித்து வருகின்றனர்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com