12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த முக்கிய தகவல்!

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த முக்கிய தகவல்!

தமிழக அரசு நேற்று பிறப்பித்த உத்தரவில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தது என்பதையும் ஆனால் அதே நேரத்தில் 12ஆம் வகுப்பு செய்முறை தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் கூறியிருந்தது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து 12ஆம் வகுப்பு தேர்வு நடத்தப்படுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி மாணவர்கள் மற்றும் பெற்றோர் மனதில் எழுந்துள்ளது.

இந்த நிலையில் இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் தேர்வு துறையிடம் இருந்து வந்த தகவலின் படி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என்றும் வரும் ஜூன் மாதம் இந்த தேர்வை நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு மற்றும் தேர்வு அட்டவணை விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இருப்பினும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஜூன் மாதம் வரை நீடித்தால் அதற்கு மேலும் தேர்வுகள் ஒத்தி வைக்கலாம் என்று கூறப்படுகிறது. மாணவர்களின் தேர்வு முக்கியம் என்றாலும் மாணவர்களின் பாதுகாப்பு அதைவிட முக்கியம் என்பதால் 12ஆம் வகுப்பு தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com