Connect with us

உலகம்

துபாயில் பிசினஸ் செய்யும் இந்தியர்களின் கவனத்திற்கு.. புதிய வரி விதிகள் அமல்..!

Published

on

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் புதிய வரிகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த வரிகள் வரும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து துபாய்க்கு சென்று வேலை பார்க்கும் இந்தியர்கள் அந்நாட்டின் இந்த புதிய வரி விதிப்பு குறித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இந்த புதிய வரி விதிப்பு குறித்து தற்போது விளக்கமாக பார்ப்போம்.

சம்பளம் பெறுபவர்கள் இந்த புதிய வரிவிதிப்பின் கீழ் வரமாட்டார்கள் என்றும்,
புதிய வரிவிதிப்பு விதிகள் வணிக வருமானம் உள்ள நபர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சம்பள வருமானம் பெறும் நபர்கள் புதிய வரிவிதிப்பு விதிகளின் கீழ் வரமாட்டார்கள் என்பதால் நீங்கள் துபாய்/யுஏஇயில் வேலை செய்து கொண்டிருந்தாலோ அல்லது வேலைக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தாலோ, புதிய வரி விதிப்பு விதிகள் உங்களைப் பாதிக்காது.

ஆனால் துபாயில் பிசினஸ் செய்பவர்கள் AED 375,000க்கும் அதிகமாக வருமானம் இருந்தால் வரி செலுத்த வேண்டும். புதிய சட்டத்தின் கீழ் AED 375,000 அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 84 லட்சம் வரை வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒருசில வணிகங்களுக்கு வரிவிலக்கு உள்ளது என்பதால் துபாய், ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளில் வணிகம் செய்ய திட்டமிடும் இந்தியர்கள், வணிக வரியிலிருந்து விலக்கு நிலையைப் புரிந்துகொண்டு அவற்றை பின்பற்ற வேண்டும்.

புதிய வதி விரிப்பு 2023ஆம் ஆண்டு ஜூன் 1 அமலுக்கு வருகிறது. ஜூன் 1ஆம் தேதிக்கு பின் துபாயில் தொழில் செய்யும் இந்தியர்களின் வருமானம் AED 375,000க்கும் மேல் இருந்தால் அந்த வருமானத்திற்கு 9% கார்ப்பரேட் வரி செலுத்த வேண்டும். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிப்பவர்கள், வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மட்டுமே புதிய வரிவிதிப்பு விதிகளின் கீழ் வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய வரி விதிப்பின்படி சிறு தொழில்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் AED 375,000 வரையிலான லாபத்திற்கு வரி இல்லை என வரித்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. மேலும் வணிகம் உரிமம் பெற்ற, வணிக நடவடிக்கைகள் அனுமதி பெற்று இயங்கும் பிற வணிக நடவடிக்கைகள் தவிர்த்து வேலை வாய்ப்பு, ரியல் எஸ்டேட் மற்றும் பிற முதலீடுகளிலிருந்து கிடைக்கும் தனிநபர் சம்பாதித்த வருமானத்திற்கு கார்ப்பரேட் வரி விதிக்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.

வணிகம்17 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?