தமிழ்நாடு
முக்கிய செய்தி.. புதிய, திருத்தப்பட்ட ரேஷன் கார்டுகள் இனி வீட்டிற்கே டெலிவரி செய்யப்படும்!

ரேஷன் கார்டுகள் விநியோகிக்கும் முறையில், புதிய திருத்தத்தைத் தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செய்துள்ளது.
அதன்படி, புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள், ரேஷன் கார்டுகளில் புதிதாக நபர்களைச் சேர்ப்பது, நீக்குவது போன்ற திருத்தங்களைச் செய்தால், அதன் பின் புதிய விவரங்களுடனான ரேஷன் கார்டு வீட்டிற்கே டெலிவரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ரேஷன் கார்டு வரும் வரை பழைய ரேஷன் கார்டை வைத்தே உணவுப் பொருட்களை வாங்கிக்கொல்லலாம்.
புதிதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும், பழைய கார்டில் முகவரி, மொபைல் எண் போன்றவற்றைத் திருத்த வெண்டும், புதிதாக உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் அல்லது ஏற்கனவே ரேஷன் கார்டில் உள்ளவர்களின் பெயர்களை நீக்க வேண்டும் என்றால் www.tnpds.gov.in என்ற இணையதளம் மூலம் செய்யலாம்.
புதிய ரேஷன் கார்டு அல்லது திருத்தப்பட்ட ரேஷன் கார்டை பெற விரும்புபவர்கள் அதற்கு 20 ரூபாய் கட்டணம் மற்றும் 25 ரூபாய் தபால் கட்டணத்தை செலுத்த வேண்டும்.

Tamilnadu Postal
புதிய ரேஷன் கார்டு டெலிவரி செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்ட பிறகு பழைய ரேஷன் கார்டை பயன்படுத்த முடியாது.