தமிழ்நாடு

கடந்த ஆண்டு எதிர்ப்பு, இந்த ஆண்டு நடிப்பா? பாரதிராஜாவை கேலி செய்யும் நெட்டிசன்கள்!

Published

on

கடந்த ஆண்டு அமேசான் ஓடிடி தளத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பாரதிராஜா இந்த ஆண்டு அமேசான் ஓடிடி தளத்தின் விளம்பர படத்தில் நடித்து இருப்பதற்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு சமந்தா நடித்த ’தி ஃபேமிலிமேன் 2’ என்ற தொடர் வெளியான போது அந்த தொடர் தமிழர்களுக்கு எதிரானது என்று கூறி குரல் கொடுத்தவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தங்கள் எதிர்ப்பை மீறி அமேசான் ஓடிடியில் ‘தி ஃபேமிலிமேன் 2’ தொடர் ஒளிபரப்புவதை நிறுத்தாவிட்டால் உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் அமேசான் நிறுவனத்தையே புறக்கணிக்க நேரிடும் என்றும் அந்நிறுவனத்தின் எந்த பொருளையும் வாங்க மாட்டோம் என்றும் அதிரடியாக அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில் தற்போது அமேசான் நிறுவனத்தில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் அமேசான் நிறுவனத்தின் விளம்பர படம் ஒன்றில் பாரதிராஜா நடித்துள்ளார். இதனையடுத்து கடந்த ஆண்டு அமேசானுக்கு எதிராக குரல் கொடுத்து விட்டு இந்த ஆண்டு அமேசான் விளம்பரப் படத்தில் நடித்திருப்பது எந்த வகையில் நியாயம் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நெட்டிசன்களின் இந்த கேள்விக்கு பாரதிராஜா என்ன பதில் சொல்லப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

Trending

Exit mobile version