சினிமா செய்திகள்

அசீம்-மோடி, விக்ரமன் – ராகுல் காந்தி.. கமல் – சுப்ரீம் கோர்ட்: பிக்பாஸை ஒப்பிட்ட நெட்டிசன்!

Published

on

அசீமை பிரதமர் மோடியுடனும் விக்ரமனை ராகுல் காந்தி உடனும் கமல்ஹாசனை சுப்ரீம் கோர்ட் ஆகவும் ஒப்பிட்டு நெட்டிசன் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக் பாஸ் தமிழ் சீசன் ஆறு நிகழ்ச்சி கடந்த 105 நாட்களாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த இரண்டு நாட்களாகவே அசீம் தான் டைட்டில் வின்னர் என கூறப்பட்டு வந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் மீது இருந்த மரியாதையை பலருக்கும் போய்விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கமலஹாசனால் இதுவரை இல்லாத அளவில் அதிகமாக கண்டிக்கப்பட்ட ஒருவர் கமல்ஹாசன் கையாலே பிக் பாஸ் டைட்டில் விட்ட பட்டம் பெற்றது முரண்பாடுகளின் மொத்த உருவமாக உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆரம்பம் முதல் நேர்மையாக விளையாடி வந்த விக்ரமனுக்கு அரசியல் காரணங்களால் டைட்டில் பட்டம் கொடுக்கவில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி இந்த சீசனில் இதுவரை இல்லாத அளவு அரசியல் தலையீடு இருந்ததாகவும் அரசியல் தலைவர் ஒருவரே தனது டுவிட்டர் பக்கத்தில் விக்ரமனுக்கு ஓட்டு போடுங்கள் என்று கூறியதும் அவருக்கு நெகட்டிவ் ஆக மாறிவிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் தமிழ்நாட்டை பெரியார் நாடு என்று மாற்றுவேன் என விக்ரமன் கூறியதையும் பலரும் ரசிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நெட்டிசன் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு குட்டி இந்தியாவாக பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒப்பிட்டு பதிவு செய்துள்ளார்.அதில் அசீமை பிரதமர் மோடியாகவும் விக்ரமனை ராகுல் காந்தியாகவும் ஒப்பிட்டுள்ளார். மேலும் அசீமுக்க்கு ஓட்டு போட்டவர்கள் எல்லோரும் வடக்கன்கள் என்றும் விஜய் டிவி தான் தேர்தல் ஆணையம் என்றும் விளம்பரதாரர்கள் அதானி அம்பானி என்றும் அவர் பதிவு செய்துள்ளார்.

கமல்ஹாசனை உச்சநீதிமன்றத்துடன் ஒப்பிட்ட அவர் என்னதான் உச்சநீதிமன்றத்திற்கு பவர் இருந்தாலும் மத்திய அரசுக்கு எதிராக ஒரு தீர்ப்பையும் சொல்லாது, சொல்லவும் முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மொத்தத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போதைய நிலையில் உள்ள ஒரு குட்டி இந்தியா என்று அவர் பதிவு செய்தது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இந்த பதிவுக்கு ஏராளமான கமெண்ட்ஸ் கல் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version