இந்தியா

நேபாள விமான விபத்திற்கு சில நொடிகளுக்கு முன் பகிரப்பட்ட ஃபேஸ்புக் வீடியோ.. அதிர்ச்சி தகவல்

Published

on

By

நேற்று காலை நேபாள விமானம் விபத்துக்குள்ளாகி அதில் பயணம் செய்த இந்தியர்கள் உள்பட 72 பேர் மரணம் அடைந்தனர் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் விபத்திற்கு சில நொடிகளுக்கு முன் மூன்று இளைஞர்கள் எடுத்த facebook லைவ் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

நேபாள நாட்டின் பொக்ராம் விமான நிலையத்தில் உள்ள ஓடுபாதையில் விமானம் ஒன்று தரையிறங்கி கொண்டிருந்தபோது திடீரென நொறுங்கி விபத்துக்குள்ளானது. விமானம் தீப்பிடித்ததை இருந்ததை அடுத்து உடனடியாக மீட்பு படையினர் விமானத்தில் உள்ளது பயணிகளை காப்பாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டனர். ஆனால் அதில் பயணம் செய்த 68 பயணிகள் மற்றும் நான்கு ஊழியர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல் வெளியானது.

இந்த விமானத்தில் ஐந்து இந்திய இளைஞர்கள் பயணம் செய்திருந்தனர் என்பதும் அவர்களும் உயிர் இழந்ததாகவும் கருதப்படுகிறது. இந்த நிலையில் இந்த விமானத்தில் பயணம் செய்த ஐந்து இளைஞர்களில் மூன்று பேர் விமான விபத்துக்குள்ளாவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர் பேஸ்புக்கில் லைவ் வீடியோவை ஒளிபரப்பி உள்ளனர். அந்த வீடியோவில் சோனு ஜெய்ஸ்வால் (29), அனில் ராஜ்பார் (28), விஷால் சர்மா (23), மற்றும் அபிஷேக் சிங் குஷ்வாஹா (23) ஆகிய மூவரும் விமானம் இன்னும் சில நொடிகளில் தரையிறங்க போவதாக சந்தோஷத்துடன் தெரிவித்தனர்.

அவர்கள் தங்களுடைய போன் கேமரா மூலம் விமானம் தரையிறங்குவதை வீடியோவில் காட்டிக் கொண்டிருந்தபோது திடீரென விமானம் விழுந்து நொறுங்கியது. அந்த வீடியோவில் விமானத்தில் தீ பிழம்புகள் உள்ள காட்சியும் அதனை அடுத்து விமானம் முழுவதும் தீப்பிடிக்கும் காட்சியும் உள்ளன. அது மட்டும் இன்றி விமானத்தில் இருந்த பயணிகள் அலறி அடித்த சத்தமும் அதன் பின் மொபைல் போன் கீழே விழுந்து உருளும் காட்சியும் அதில் உள்ளன.

இந்த மூன்று இளைஞர்கள் நேபாள நாட்டில் உள்ள பசுபதிநாதர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு அதன் பிறகு பொக்ராவுக்கு திரும்பிக் கொண்டிருந்த போதுதான் இந்த விமான விபத்து நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. உயிரிழந்த இந்திய இளைஞர்களின் உடல்கள் உட்பட அனைத்து பயணிகளின் உடல்களும் உறவினர்களின் உரிய முறையில் ஒப்படைக்கப்படும் என்றும் இந்த விபத்து குறித்து விசாரணை செய்ய உத்தரவிட்டதாகவும் நேபாள அரசு தெரிவித்துள்ளது. ஐந்து பேர் கொண்ட விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் இந்த விபத்து கோர்த்து விசாரணை செய்து நேபாள அரசுக்கு அறிக்கையை தாக்கல் செய்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக தான் இந்த விமான விபத்து ஏற்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அனுமதி அளிக்கப்பட்டதாகவும் தரை இறங்கிக்கொண்டிருந்த போதுதான் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் மோசமான வானிலை விபத்துக்கு இன்னொரு முக்கிய காரணம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Trending

Exit mobile version