உலகம்
நேபாள விமானம் திடீர் மாயம்: பயணிகள் கதி என்ன?

நேபாளத்திலிருந்து சென்ற விமானம் திடீரென மாயமாகி உள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் கதி என்ன என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளது.
நேபாளத்தில் இருந்து 19 பயணிகள் மற்றும் 3 பணியாளர்கள் என மொத்தம் 22 பேருடன் கிளம்பிய விமானம் ஒன்று கிளம்பிய சற்று நேரத்தில் மாயமானது. விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விமானத்தில் 4 இந்தியர்கள் இருந்ததாக நேபாளம் ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த விமானம் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் விரைவில் இந்த விமானம் கண்டுபிடிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
தற்போது வரை இந்த விமானம் குறித்த எந்த தகவலும் இல்லை என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேபாளத்தில் உள்ள பொக்காரா என்ற பகுதியிலிருந்து ஜோம்சோம் என்ற பகுதிக்கு சென்று கொண்டிருந்த விமானம் திடீரென தாரா விமான நிறுவனத்தின் கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்ததாக கூறப்படுகிறது.
இன்று காலை 9.30 மணிக்கு விமானத்தின் தொடர்பு இழக்கப்பட்ட நிலையில் இன்னும் எந்தவித தொடர்பும் இல்லை என்ற தகவல் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.