சினிமா செய்திகள்
வெளியானது அலறவிடும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ ஸ்னீக் பீக்!

எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னரே அனைத்துப் பணிகளையும் முடித்து ரிலீஸுக்குத் தயாரான திரைப்படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே இந்தப் படத்தின் டீசர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் தயாரிப்பு நிறுவனத்துக்கு சிலப் பிரச்சனைகள் எழுந்த காரணத்தினால், படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.
இப்படியான சூழலில் வரும் 5 ஆம் தேதி முதல் படத்தை சினிமா தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய உள்ளது படக்குழு. எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மற்றும் ராக்ஃபோர்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு செல்வராகவனின் ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா, இசையமைத்து உள்ளார்.
எஸ்.ஜே.சூர்யாவைத் தவிர ரெஜினா கசாண்டிரா மற்றும் நந்திதா ஸ்வேதா ஆகியோருக்குப் படத்தில் முக்கிய ரோல் கொடுக்கப்பட்டு உள்ளது. ஹாரர் த்ரில்லர் ஜானரில் படம் எடுக்கப்பட்டுள்ளதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
தற்போது இந்தப் படத்தின் முதல் ஸ்னீக் பீக் ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது.
5 days to go for #NenjamMarappathillai
Ramsey @ Ramasamy and Mariam will meet you on big screens from March5 @Rockfortent @siddhu_viva @Karthikravivarm @KarpagamTheatre @srisakthicinema @Sarvam_Cinemas @iam_SJSuryah @thisisysr @ReginaCassandra pic.twitter.com/NOAjZoqwKX— Kanthaswamy Arts Centre (@KanthaswamyC) February 28, 2021