செய்திகள்

பள்ளி கழிவறை சுவர் இடிந்து 3 மாணவர்கள் மரணம் – நெல்லையில் அதிர்ச்சி

Published

on

நெல்லையில் பொருட்காட்சி திடல் அருகே சாஃப்டர் மேல்நிலைப்பள்ளி செயல்படு வருகிறது. இன்று காலை 11 மணியளவில் இடைவேளை விடப்பட்டது. எனவே, மாணவர்கள் சிறுநீர் கழிக்க கழிவறைக்கு சென்றனர்.

அப்போது கழிவறை சுவர் திடீரென இடிந்து விழுந்தது. எனவே, மாணவர்கள் அலறியடித்தபடி அங்கிருந்து தப்பி ஓடினர். ஆனாலும் இடிபாடுகளில் பல மாணவர்கள் சிக்கிக் கொண்டனர். எனவே, உடனடியாக பள்ளி நிர்வாகம் காவல்துறைக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்ததுர். எனவே, அவர்கள் அங்கு சென்று இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், 8ம் வகுப்பு மாணவர்கள் சஞ்சய், விஷ்வ ரங்ஷன் என 2 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதில் சில மாணவர்கள் காயமடைந்தனர். அதில், மருத்துவமனையில் சிகிசை பலனின்றி மேலும் ஒரு மாணவர் உயிரிழந்தார். எனவே, பலி எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் நெல்லையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்ததால் சுவர் இடிந்து விழுந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

Trending

Exit mobile version