சினிமா செய்திகள்

குலதெய்வம் கோவிலுக்கு நயன்தாராவை அழைத்து சென்ற விக்னேஷ் சிவன்: வைரல் வீடியோ

Published

on

நடிகை நயன்தாராவை இயக்குநர் விக்னேஷ் சிவன் வரும் 9-ஆம் தேதி திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படும் நிலையில் தன்னுடைய குல தெய்வம் கோயிலுக்கு நயன்தாராவை விக்னேஷ் சிவன் அழைத்துச்சென்ற வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் விக்னேஷ் சிவனின் குலதெய்வம் கோயில் பாபநாசம் அருகே உள்ள நிலையில் திருச்சி வரை விமானத்தில் சென்ற நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன், அங்கிருந்து ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீரங்கம் கோவிலில் வழிபட்டனர்.

இதனையடுத்து இருவரும் பாபநாசத்தில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து வழிபட்டனர். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் ஜூன் 9-ஆம் தேதி திருப்பதியில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற உள்ள நிலையில் இந்த திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இந்த திருமணத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதன்பிறகு சென்னையில் விரைவில் பிரம்மாண்டமாக திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.

Trending

Exit mobile version