சினிமா செய்திகள்
ஐதராபாத்தில் ஆடம்பர வீடு வாங்கிய சமந்தாவின் முன்னாள் கணவர்.. எத்தனை கோடி தெரியுமா?

நடிகை சமந்தாவின் முன்னாள் கணவரும் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நடிகர் நாக சைதன்யா ஹைதராபாத்தில் பிரம்மாண்டமான ஆடம்பர மாளிகையை வாங்கி உள்ளார் என்றும் இந்த மாளிகையின் மதிப்பு ரூபாய் 15 கோடி என்றும் கூறப்படுகிறது.
ஹைதராபாத்தில் உள்ள முக்கிய பகுதிகளில் ஒன்று ஜூப்ளி ஹில்ஸ். இந்த பகுதியில் தான் நாக சைதன்யா ஆடம்பர வீட்டை வாங்கி உள்ளார். இந்த வீட்டின் தற்போதைய மதிப்பு 15 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. இந்த வீட்டில் தான் நாக சைதன்யா விரைவில் குடியேற போவதாக கூறப்படுகிறது. இந்த வீட்டில் அவர் தனியாக வசிக்கப் போகிறாரா அல்லது பெற்றோருடன் வசிக்க போகிறாரா என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.
நாக சைதன்யா வாங்கியுள்ள இந்த வீட்டில் பல வசதிகள் இருப்பதாகவும் ஹைதராபாத்தில் உள்ள ஆடம்பர வீடுகளில் இதுவும் ஒன்றும் ஒன்று கூறப்படுகிறது இந்த வீட்டின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. சமந்தாவின் பிரிவுக்கு பின் பல திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமான நாக சைதன்யா தற்போது தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறி உள்ளார். இதனை அடுத்து அவருக்கு சம்பளம் அதிகரித்துள்ளது என்பதும், அதனால் தான் அவர் தற்போது ஆடம்பர வீட்டை வாங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர் நாக சைதன்யா இரண்டாவது திருமணம் செய்ய போவதாகவும் அவருக்காக பெற்றோர்கள் பெண்பார்க்கும் படலத்தை தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. தமது வருங்கால மனைவிக்காக அவர் இந்த புதிய வீட்டை வாங்கி இருப்பதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டு இந்த புதிய ஆடம்பர வீட்டிற்கு மருமகளாக போகும் பெண் யார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்த நிலையில் நடிகர் நாக சைதன்யா தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ’கஸ்டடி’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.