வணிகம்

சம்பளம் வேண்டாம் என்ற அம்பானி, முக்கிய அதிகாரிகளுக்கு 50% வரை சம்பளம் கட்!

Published

on

இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவருமான முகேஷ் அம்பானி ஏப்ரல் மாதம் முதல் தனக்குச் சம்பளம் வெண்டாம் என்று விட்டுக்கொடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் ஊரடங்கு போன்ற கரணங்களால் நாடு முழுவதும் அனைத்து தொழில்துறை நிறுவனங்களும் இயங்காமல் உள்ளன. அதனால் ஏறப்படும் இழப்பை ஈடுசெய்ய ஏப்ரல் 1-ம் தேதி முதல் தனக்குச் சம்பளம் வேண்டாம் என்று முகேஷ் அம்பானி விட்டுக்கொடுத்துள்ளார்.

மேலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகளுக்கு 30 முதல் 50 சதவீதம் வரை சம்பளத்தைக் குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஹைட்ரோ கார்பன் பிரிவில் ஆண்டுக்கு 15 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகச் சம்பளம் வாங்கும் ஊழியர்களின் சம்பளத்தில் 10 சதவீதத்தை பிடித்தம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் நிறுவன ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் முதல் காலாண்டில் வழங்கப்படும் போனஸ் தொகையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version