இந்தியா

பேருந்து – பைக் மோதல்…அடியில் சென்ற வாலிபர்… பதபதைக்கும் வீடியோ…

Published

on

சாலை விதிகள் என்பது எல்லோருக்கும் பொதுவானது. அதை சரியாக கடைபிடிக்க வேண்டும். சாலைவிதிகளை எல்லோரும் மதித்து நடக்க வேண்டும். ஆனால், அரசு என்ன விதிமுறைகள் விதித்தாலும், போலீசார் என்ன கெடிபிடிகளோடு நடந்து கொண்டாலும் சிலர் அதை மதிக்காமல் நடந்து கொள்வார்கள்.

சில சமயம் இளம்பெண்களும் அதை மீறுகிறார்கள். அதேபோல், அரசு பேருந்து ஓட்டுனர்களும் விதிமுறைகளை மீறி சென்று விபத்தை ஏற்படுத்துகின்றனர். குறிப்பாக பைக்கில் செல்லும் வாலிபர்கள்தான் சாலையில் சாகசம் என்கிற பெயரில் கண்டபடி பைக்கை ஓட்டி விபத்தில் சிக்குகின்றனர். பைக்கை வேகமாக ஓட்டி விபத்தில் பல வாலிபர்கள் தங்களின் உயிரை இழந்துள்ளனர்.

இந்நிலையில், குஜராத்தில் ஒரு வாலிபர் விபத்தில் சிக்கி மயிரிழையில் உயிர் தப்பிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. ஒரு திருப்பத்தில் பேருந்தில் மோதும் அந்த வாலிபர் பேருந்துன் முன் சக்கரங்களுக்கு அடியில் சென்றுவிடுகிறார். ஆனால், ஓட்டுனர் வண்டியை நிறுத்திவிட அவருக்கு அதிர்ஷ்டவசமாக எதுவும் நடிக்கவில்லை. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து திருப்பங்களில் கவனமாக பைக்கை ஓட்டுங்கள் என பதிவிட்டு வருகின்றனர்.

Gujarat: Motorcyclist Escapes Unhurt After Getting Trapped Under Bus Video Goes Viral

Trending

Exit mobile version