ஆன்மீகம்
பல்திறமைகள் கொண்டவர்கள் யார்? ஜோதிடம் கூறும் சிறந்த ராசிக்காரர்கள்!
ஜோதிடத்தின் படி ஒவ்வொரு ராசிக்காரருக்கும் தனித்துவமான திறமைகள் இருக்கின்றன. ஆனால் சில ராசிக்காரர்கள் மட்டும் பிறவியிலேயே பல்திறமைகளுடன் (Multitalented) இருப்பார்கள். அவர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்தாலும் தரத்தில் சமரசம் செய்யமாட்டார்கள். அழுத்தமான சூழ்நிலையில் கூட அமைதியாக செயல்படுவார்கள்.
மிதுனம் ♊
மிதுன ராசிக்காரர்கள் எப்போதும் சுறுசுறுப்பானவர்கள். புதிய விஷயங்களை முயற்சிக்க விரும்புகிறார்கள். ஒரே வேலை அவர்களுக்கு சலிப்பை தருவதால், எப்போதும் வித்தியாசமான காரியங்களில் ஈடுபடுவார்கள். அவர்கள் பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்யும் திறமையுடன் பிறந்தவர்கள்.
கன்னி ♍
கன்னி ராசிக்காரர்கள் தொலைநோக்கு பார்வையும் புத்திக்கூர்மையும் கொண்டவர்கள். அதிக பணிகளை ஒப்படைத்தாலும் அமைதியாகவும் திட்டமிட்டும் செயல்படுவார்கள். அழுத்தமான சூழலிலும் தரத்தை காக்கும் வல்லமை இவர்களிடம் உள்ளது.
மகரம் ♑
மகர ராசிக்காரர்கள் கடுமையான ஒழுக்கம் மற்றும் இலட்சிய வெறி கொண்டவர்கள். நேரத்தை மதிக்கும் இவர்களால் குடும்பம், வேலை, தனிப்பட்ட இலக்குகள் அனைத்தையும் சமநிலையுடன் கையாள முடியும். மல்டிடாஸ்கிங் (Multitasking) இவர்களின் மிகப்பெரிய பலம்.
துலாம் ♎
துலாம் ராசிக்காரர்கள் நல்லிணக்கம் மற்றும் சமநிலையை விரும்புபவர்கள். சிறந்த பேச்சுத்திறன் கொண்ட இவர்களுக்கு எத்தனை வேலைகள் வந்தாலும் அமைதியாகவும் நிதானமாகவும் முடிக்கக் கூடிய திறமை உண்டு. அனைவருடனும் பழகும் தன்மையும் இவர்களுக்கு ஒரு கூடுதல் பலம்.