Connect with us

ஆட்டோமொபைல்

புதிய வாகனப் பதிவில் BH(Bharat series)என துவங்கும் பதிவெண் அறிமுகம்!

Published

on

புதிய வாகனப் பதிவில் BH(Bharat series)என துவங்கும் பதிவெண்ணை ஒன்றிய அரசு அறிமுகம் செய்துள்ளது.

அடிக்கடி பணி நிமித்தமாக பிற மாநிலங்களுக்கு டிரான்ஃபர் ஆகும் நபர்கள் தங்களது வாகனங்கள் பதிவை மாற்றாமல் ஒரே வாகன எண்ணைப் பயன்படுத்தும் வகையில் BH(Bharat series)என துவங்கும் வாகன பதிவெண்ணை ஒன்றிய அரசு அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய வாகன பதிவெண்ணைப் பெறும் வாகனங்கள் வெளிமாநிலங்களுக்கு இடம்பெயரும் போது பதிவெண்ணை மாற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. நாடு முழுவதும் எல்லா மாநிலங்களிலும் இந்த புதிய பதிவெண் செல்லும்.

பாதுகாப்புத் துறை ஊழியர்கள், மத்திய மாநில அரசு ஊழியர்கள், 4 அல்லது அதற்கும் அதிகமான மாநிலங்களில் கிளைகள் உள்ள தனியார் அலுவலக ஊழியர்கள் தங்களுக்குத் தேவைப்பட்டால் புதிய பதிவெண்ணைப் பெற்றுக்கொள்ளலாம் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதிய பதிவெண்கள் YY BH 4144 XX YY என்ற வடிவில் இருக்கும். அதாவது வாகனம் பதிவு செய்த ஆண்டு, BH(Bharat series), பாரத் சீரிஸ் கோடு 4 இலக்கில்- 0000 to 9999 தொடர்ந்து இரண்டு இலக்கு ஆங்கில எழுத்துக்கள் AA to ZZ வரையில் என்ற வரிசையில் இடம்பெறும்.

2, 4, 6, 8 ஆண்டுகளுக்கு பாரத் சீரிஸ் பதிவெண் வரியைச் செலுத்தி இந்த எண்ணைப் பெற முடியும். இந்த பதிவெண் உள்ள வாகனங்கள் 14 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு ஒரு முறை வரி செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்4 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?