வணிகம்

9.5% வரை வட்டி வழங்கும் சிறுநிதி வங்கிகள்.. ஆனால் ஒரு எச்சரிக்கை..!

Published

on

கடந்த சில மாதங்களாக இந்தியாவில் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் பிக்சட் டெபாசிட்டிற்கு வட்டி விகிதங்களை உயர்த்தி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் சிறுநிதி வங்கிகள் பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 9.5% வரை வட்டி வழங்குவதாக அறிவித்துள்ளனர். ஆனால் இந்த வங்கிகளின் நிலை மற்றும் பொருளாதார நிலவரம் குறித்து ஆய்வு செய்து தில் முதலீடு செய்யுமாறு முதலீட்டாளர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் முதல் இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை சுமார் 250 அடிப்படை புள்ளிகள் வரை அதிகரித்துள்ளது. இதனை அடுத்து முதலீட்டாளர்களை கவரும் வகையில் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் பிக்சட் டெபாசிட்டிற்கு வட்டி விகிதங்களை உயர்த்தி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

ஒரு சில தனியார் வங்கிகளில் 7.5% வரை பிக்சட் டெபாசிட்டிற்கு வட்டி வழங்கிவ வருகின்றன என்பதும் மூத்த குடிமக்களுக்கு எட்டு சதவீதம் வரை வட்டி வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் சிறுநிதி வங்கிகள் 9.5 சதவீதம் வரை வட்டி வழங்குவதாக விளம்பரம் செய்கின்றன. இந்த வங்கியின் நிதி நிலைமை மற்றும் அதிகாரம் குறித்து ஆய்வு செய்து அதன் பின் முதலீடு செய்ய வேண்டும் என்றும் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை பாதுகாப்பு இல்லாத வங்கிகளில் முதலீடு செய்ய கூடாது என்றும் முதலீட்டு ஆலோசகர்கள் அறிவுறுத்துள்ளனர்.

சிறுநிதி வங்கிகள் மற்ற பொதுத்துறை வங்கிகளை விட ரிஸ்க்கானது என்றும் நிதி நிலைமையை சரி பார்த்து நாம் முதலீடு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் மியூச்சுவல் ஃபண்ட் உள்ளிட்ட திட்டங்களில் கூட தற்போது 8 முதல் 10 சதவீதம் வரை தான் வருமானம் வருவதால் பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்வது பாதுகாப்பானது மற்றும் நிலையானது என்று பல முதலீட்டாளர்கள் தெரிந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version