கிரிக்கெட்

டிரெண்ட் போல்ட் பவுலிங்கை வெளுத்து வாங்கிய மொயின் அலி: 17 பந்துகளில் அரைசதம்

Published

on

சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே இன்று ஐபிஎல் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்யும் சென்னை அணி ராஜஸ்தான் பந்துவீச்சாளர்களை வெளுத்து வருகிறது

குறிப்பாக டிரெண்ட் போல்ட், அஸ்வின் மற்றும் பிரசித் கிருஷ்ணா பந்துகளை வெளுத்து வாங்கியுள்ளார். டிரென்ட் போல்ட் வீசீய 5வது ஓவரில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் என 26 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் அணியை கதிகலங்க வைத்தார்

தற்போது மொயின் அலி 17 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து அபாரமாக விளையாடி வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ருத்ராஜ் 2 ரன்களில் அவுட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது

 

Trending

Exit mobile version