தமிழ்நாடு

நேற்று ஜெ. மரணம் குறித்து புகார்.. இன்று அதிகாலையே சிவி சண்முகம் டெல்லி பயணம்!

Published

on

சென்னை: ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறை குறித்து குற்றச்சாட்டுகளை அடுக்கிய அமைச்சர் சி.வி. சண்முகம் இன்று திடீரென டெல்லிக்கு சென்றுள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை செய்து வருகிறது. இந்த ஆணையத்தின் புகார்கள் காரணமாக தற்போது தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அப்பல்லோ மீதும் சுகாதாரத்துறை செயலாளர்கள் மீதும், தமிழக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

இதை அதிமுகவினரே எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் குழம்பி வருகிறார்கள். இவரின் கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் மட்டும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் தனது பேட்டியில், ஜெயலலிதாவிற்கு ஆஞ்ஜியோகிராம் செய்யப்படவில்லை. அவருக்கு தவறான சிகிச்சை கொடுத்த மருத்துவர் யார்? அப்பல்லோ மருத்துவமனையை ஆட்டிப்படைத்தது யார்? இதற்கு பின்னணி யார் என்று நிறைய கேள்விகளை எழுப்பினார். மேலும் சுகாதாரத்துறை செயலாளர், மருத்துவர்களை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்றும் கூறினார்.

Trending

Exit mobile version