உலகம்

முக்கிய பிரிவை மூடுகிறது ஃபேஸ்புக்கின் மெட்டா.. மீண்டும் வேலையிழப்பா?

Published

on

பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா ஏற்கனவே பல ஊழியர்களை வேலை நீக்கம் செய்த நிலையில் தற்போது முக்கிய பிரிவை மீண்டும் மூட இருப்பதாகவும் அதன் காரணமாக இன்னும் சில ஊழியர்கள் வேலை இழக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பொருளாதார தேக்கம், பணமதிப்பிழப்பு உள்பட பல்வேறு காரணங்களால் வேலை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பாக கூகுள், பேஸ்புக், மைக்ரோசாப்ட், அமேசான் உள்ளிட்ட பல நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்நிலையில் பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தில் சமீபத்தில் ஒரு மிகப்பெரிய வேலை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் தற்போது அந்நிறுவனத்தின் சூப்பர் என்ற செயலி மூடப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரும் பிப்ரவரி மாதம் சூப்பர் செயலி அதிகாரபூர்வமாக மூடப்பட வாய்ப்பிருப்பதாகவும் அதன் காரணமாக அந்த பிரிவில் வேலை பார்த்து வரும் ஊழியர்கள் வேலை இழக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இது ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் என்பது ஒரு லைவ் ஸ்ட்ரீமிங் செயலி மட்டுமல்ல பலர் நேரலைக்கு சென்று வருவாய் ஈட்டக்கூடிய வகையில் இருப்பதால் பிப்ரவரி வரை கண்டிப்பாக சூப்பர் செயலை மூடப்படாது என்றும் ஆனால் அதே நேரத்தில் அந்த செயலியை தொடர்ந்து நடத்துவது கேள்விக்குரியே என்றும் மெட்டா நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் சூப்பர் செயலி பிரிவில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

Trending

Exit mobile version