இந்தியா
17 நாட்கள் மட்டும் படித்து ஐபிஎஸ் பாஸ் செய்ய முடியுமா? முடியும் என நிரூபித்த அக்சத் கெளசல்..!
யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்றால் பல ஆண்டுகளாக அதற்கு தயார் ஆவார்கள் என்பதும் முதல் முறை வெற்றி பெற்றவர்கள் மிகவும் அரிது என்பதும் நான்கு, ஐந்து முறை முயன்று வெற்றி பெற்றவர்கள் தான் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் ஆகியிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வெறும் 17 நாட்கள் மட்டும் படித்து ஐபிஎஸ் பாஸ் செய்த அக்சத் கெளசல் கதை இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற யுபிஎஸ்சி தேர்வு எழுத வேண்டும் என்பதும் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மாணவர்கள் இந்த தேர்வை எழுதி வருகிறார்கள் என்பது தெரிந்தது. ஆனால் ஒரு சில நூற்றுக்கணக்கான மாணவர்கள் மட்டுமே இந்த தேர்வில் வெற்றி பெறுகின்றனர் என்பதும் லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வில் தோல்வியடைந்து மீண்டும் மீண்டும் முயற்சி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று 55 வது ரேங்க் பெற்றவர் ஐஏஎஸ் அதிகாரி அக்சத் கெளசல். இவர் ஏற்கனவே நான்கு முறை ஐபிஎஸ் தேர்வு எழுதி தோல்வி அடைந்ததை அடுத்து அந்த முயற்சியை கைவிட்டு விட்டுவிட்டதாகவும் அதன் பின்னர் யுபிஎஸ்சி தேர்வு நடைபெற இருக்கும் 17 நாட்களுக்கு முன்னால் தனது நண்பர்கள் அக்சத் கெளசலை சந்தித்தபோது மீண்டும் ஒருமுறை நீ யுபிஎஸ்சி தேர்வு முயற்சித்து பார்க்கலாம் என்று கூறியதை அடுத்து அவர் ஐந்தாவது முறை தேர்வு எழுத முயற்சித்தார்.
#image_title
அப்பொழுது வெறும் 17 நாட்கள் மட்டுமே இடைவெளி இருந்தாலும் அவர் ஏற்கனவே நான்கு முறை தேர்வு எழுதியிருந்ததால் மீண்டும் அவர் தேர்வுக்கு தயாராளர். அந்த 17 நாட்கள் உழைப்புக்கு அவருக்கு பலன் கிடைத்தது. ஆம் அவரது ஐந்தாவது முயற்சியில் அவர் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று ஐபிஎஸ் அதிகாரி ஆனார்.
இது குறித்து அவர் ஐபிஎஸ் எழுத இருக்கும் மாணவர்களுக்கு கூறிய அறிவுரையின்படி தேர்வுக்கு தயாராகும் முன் மாணவர்கள் அனைவரும் தேர்வு முறை மற்றும் பாடத்திட்டத்தை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். எதிலும் அதீத நம்பிக்கையுடன் இருக்கக் கூடாது, அது தோல்வியை நோக்கி செல்லும் என்றும் தெரிவித்தார்.
மேலும் இதற்கு முன் தேர்வு எழுதியவர்கள் மற்றும் உங்கள் நண்பர்கள் உறவினர்களின் ஆலோசனை பெற்றுக்கொள்ளுங்கள் என்றும் இதற்கு முன் தேர்வு எழுதியவர்களின் அனுபவம் தேர்வில் தேர்ச்சி அடைய மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் தெரிவித்தார். மேலும் 100% நம்பிக்கையுடன் உழைப்பையும் தந்தால் கண்டிப்பாக எந்த ஒரு முயற்சியிலும் வெற்றி பெறலாம் என்றும் அதற்கு நானே மிகச் சிறந்த உதாரணம் என்று அக்சத் கெளசல் தெரிவித்துள்ளார்.