தமிழ்நாடு

சென்னையில் மாஸ்க் கட்டாயம்: சென்னை மாநகராட்சி உத்தரவு

Published

on

சென்னையில் உள்ள மாணவ மாணவிகள் பள்ளிக்கு செல்லும் போது மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பாக சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் அதிகமாகக் கொரோனா வைரஸ் பாதிப்ப்பு இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் சென்னையில் கொரோனா வைரஸை வைரஸ் பரவலை தடுப்பதற்காக சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் முதல் கட்டமாக பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் மாணவ மாணவிகளுக்கு காய்ச்சல், தலைவலி போன்ற அறிகுறி இருந்தால் உடனே கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவ மாணவர்கள் மட்டுமின்றி அனைத்து மக்களும் வெளியே வரும் போது மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Trending

Exit mobile version