சினிமா செய்திகள்

இளையராஜா மீது மரியாதை வைத்துள்ளேன்: மோடி-அம்பேத்கர் ஒப்பீடு குறித்து மாரி செல்வராஜ்

Published

on

இசையமைப்பாளர் இளையராஜா மீது மரியாதை வைத்துள்ளேன் என்று மோடி அம்பேத்கர் ஒப்பீடு குறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.

இசைஞானி இளையராஜா சமீபத்தில் மோடியும் அம்பேத்கரும் என்ற புத்தகத்திற்கு முன்னுரை எழுதியதில் மோடியுடன் அம்பேத்காரை ஒப்பிட்டு பல விஷயங்களை கூறி உள்ளார். இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து திரையுலக பிரபலங்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் இது குறித்து கருத்து கூறிய இயக்குநர் மாரி செல்வராஜ் இளையராஜா கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாக கூறினார். மேலும் இளையராஜா மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன் என்றும் இது குறித்து மேலும் கருத்து சொல்ல விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்

ஆனால் அதே நேரத்தில் இயக்குனர் சீனு ராமசாமி இது குறித்து கருத்து கூறிய போது மோடியும் அம்பேத்காரும் என்ற புத்தகத்திற்கு மிகவும் சிறப்பாக இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார் என்பதும் அவர் தனது வாழ்த்துக்கள் என்றும் கூறியுள்ளார்

 

 

Trending

Exit mobile version