இந்தியா

ஒரே ஒரு க்ளிக்.. ரூ.37 லட்சம் காலி.. சைபர் க்ரைம் எச்சரிக்கை!

Published

on

மும்பையைச் சேர்ந்த நபர் ஒருவர் ஒரே ஒரு கிளிக் செய்ததால் ரூ.37 லட்சத்தை இழந்துள்ளதாகவும் இதுபோன்று தெரியாத நபரிடம் இருந்து வரும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் சைபர் க்ரைம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மும்பையைச் சேர்ந்த ஒரு நபர் ஆன்லைன் மூலம் வேலை தேடிக் கொண்டிருந்தபோது அவருக்கு ஒரு லிங்க் கிடைத்துள்ளது. இந்த லிங்கை கிளிக் செய்து அதில் உள்ள பொருளை புரமோஷன் செய்தால் பணம் கிடைக்கும் என்று கூறப்பட்டிருந்தது.

பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை காரணமாக ஆன்லைன் மூலம் அந்த இந்த வேலையை அவர் எடுத்துக்கொண்டார். அந்த லிங்க்கை க்ளிக் செய்து அந்த லிங்கில் இருந்த பொருள்களுக்கு ஐந்து நட்சத்திர ரேட் வழங்கி நல்ல கமெண்ட்ஸ்கள் மட்டும் வழங்க வேண்டும் என்பதுதான் அவருக்கு வழங்கப்பட்ட வேலை.

அதை அவர் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த நிலையில் அவரது வேலட் பகுதியில் தொகை ஏறிக்கொண்டே இருந்தது. அதுமட்டுமின்றி அவ்வப்போது அந்த தொகையை திரும்ப எடுக்க வேண்டும் என்பதற்காக டெபாசிட் கட்டணம் கட்ட வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதை நம்பி அவர் அவ்வப்போது ஆயிரக்கணக்கில் டெபாசிட் கட்டியுள்ளார். மொத்தம் அவர் தனது வேலட் கணக்கில் 37 லட்சம் கட்டிய பிறகு அவரது மொத்த வருமானம் 45 லட்சம் என காட்டி உள்ளதாக தெரிகிறது.

அவர் தனக்கு கொடுத்த வேலையை முடித்தவுடன் கட்டிய தொகையையும் பணி செய்ததற்கான சம்பளத்தையும் சேர்த்து ரூ.45 லட்சம் காட்டி உள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து அவர் தன் வேலட்டில் உள்ள பணத்தை தனது அக்கவுண்டுக்கு மாற்ற முயற்சிக்கும் போது திடீரென அவரது கணக்கு செயல்படாமல் போனதாக தெரிகிறது.

அதன் பிறகுதான் அவர் தாம் ஏமாற்றப் பட்டோம் என்பதை புரிந்து கொண்டு மும்பையில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் ஐபிசி 420 என்ற பிரிவு சட்டத்தின்படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஆன்லைன் வேலை வாய்ப்பு வழங்குவதாக கூறி தெரியாத நபரிடம் இருந்து லிங்க் வந்தால் அதை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் குறிப்பாக பணம் செலுத்த வேண்டும் என்று எந்த ஆன்லைன் வேலைவாய்ப்பு சொன்னாலும் அது மோசடி தான் என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் சைபர் கிரைம் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Trending

Exit mobile version