செய்திகள்

40 அடி உயரத்திலிருந்து விழுந்த பக்தர்… அலகு குத்தியபோது பரிதாபம்…அதிர்ச்சி வீடியோ….

Published

on

கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் கோவில்கள் மூடப்பட்டிருந்தது. தற்போது ஆடி மாதம் என்பதால் அம்மன் மற்றும் முருகன் கோவில்களில் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. ஆடி கிருத்தகையை முன்னிட்டு முருகன் கோவில்களில் வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. ஆனால், மக்கள் கூட்டமாக கூடுவது, அலகு குத்துவது போன்ற நிகழ்ச்சிகளுக்கு அரசு தடை விதித்துள்ளது.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் எட்றப்பள்ளி எனும் இடத்தில் உள்ள முருகன் கோவிலில் பக்தர்கள் அலுகு குத்தி நேர்த்திக் கடன் செய்தனர். இதில் முதுகில் அலகு குத்திய 4 பக்தர்கள் ராட்சத கிரேனில் கட்டி தொங்கவிடப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர். அப்போது அதில் ஒருவர் 40 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்தார். இதைக்கண்டு அங்கிருந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த பக்தர் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். மருத்துவனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

பதைபதைக்கும் காட்சிகள்..! 40 அடி உயரத்தில் கிரேனில் இருந்த விழுந்த பக்தர்..!

video courtesy to polimer chanel…

Trending

Exit mobile version