உலகம்

நாட்டை விட்டு வெளியேறுகிறோமா? நமல் ராஜபக்சே ஆவேசம்

Published

on

நானும் என் தந்தையும் நாட்டை விட்டு வெளியேறுவதாக கூறப்படுவது முழுக்க முழுக்க வதந்தி என்றும் எந்த பிரச்சனையையும் சந்திக்க தயார் என்றும் நாட்டைவிட்டு வெளியேறும் எண்ணம் எங்களுக்கு அறவே இல்லை என்றும் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே கூறியுள்ளார்.

இலங்கையில் ஏற்படும் பொருளாதார சீரழிவு காரணமாக மகிந்த ராஜபக்சேவுக்கு நெருக்கடி ஏற்பட்டது என்பதும் இதனால் அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தலைமறைவாகி உள்ளார் என்றும் கூறப்படுகிறது. மேலும் மகிந்தா ராஜபக்சே தனது குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவுக்கு தப்பி செல்ல திட்டமிட்டு உள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே இது குறித்து கூறிய போது எனக்கோ என்னுடைய தந்தைக்கோ நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் இல்லை என்றும் எங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு பொய் என்று நாங்கள் அதை நேர்மையாக சட்டப்படி சந்திப்போம் என்று தெரிவித்துள்ளார் .

மேலும் இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியான சூழ்நிலை தற்காலிகமானது என்றும், விரைவில் சுமூகமான சூழல் ஏற்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version