இந்தியா
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 61 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா!

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 61 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும் மும்பையில் மட்டும் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மகாராஷ்டிர மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை என்றும் 61,695, கொரோனா வைரஸிலிருந்து குணமாணவர்களின் எண்ணிக்கை 53,335 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸால் 349 பேர் பலியாகி உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 36,39,855 என்றும் கொரோனாவில் இருந்து குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 29,59,056 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 59,153என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனாவுக்கு 6,20,060 பேர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் இன்று மட்டும் 8,217 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் 49 பேர் பலியாகி உள்ளதாகவும் 10,097 பேர் குணமாகி உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மும்பையில் தற்போது 85,494 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.






















