தமிழ்நாடு

2 பதவியும் இருக்கா இல்லையா.. சொல்லுங்க.. ஓ பன்னீர்செல்வத்திற்கு உயர் நீதிமன்றம் பரபர கேள்வி

Published

on

சென்னை: அதிமுக பொதுக்குழுவிற்கு எதிரான சிவில் வழக்கில் இன்று சென்னை உயர் நீதிமன்றம் முக்கியமாக சில கேள்விகளை எழுப்பியது.

அதிமுக பொதுக்குழு முடிவுகளை இன்னும் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை. அதாவது அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் சொல்லிவிட்டது. அதிமுகவில் இருந்து ஓ பன்னீர்செல்வம் நீக்கப்பட்டதையும் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் சொல்லிவிட்டது.

அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டதும் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் சொல்லிவிட்டது. ஆனால் இன்னும் தேர்தல் ஆணையம் இது எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. பொதுக்குழுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டாலும் தேர்தல் ஆணையமும் ஏற்க வேண்டும்.

தேர்தல் ஆணையம் இதில் என்ன முடிவுகளை எடுக்கிறது என்று பார்க்க வேண்டும். இந்த நிலையில்தான் அதிமுகவில் இன்னும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உள்ளதா அல்லது காலவதியாகிவிட்டதா? சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. ஓ பன்னீர்செல்வம் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

அதிமுக பொதுக்குழுவிற்கு எதிராக சண்முகம் தாக்கல் செய்த வழக்கில் நீதிபதி குமரேஷ் பாபு இன்று விசாரணை நடத்தினார். அந்த விசாரணையில் இந்த கேள்வி கேட்கப்பட்டது. அதிமுக பொதுக்குழு ஜூலை 23ம் தேதிக்கு நடந்ததற்கு எதிராகத்தான் இந்த சிவில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கில்தான் அதிமுகவில் இன்னும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உள்ளதா அல்லது காலவதியாகிவிட்டதா? சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

இந்த வழக்கில் ஓ பன்னீர்செல்வம் அளிக்கும் பதிலை பொறுத்து வழக்கு அடுத்த கட்டத்திற்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கில் பதில் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்டுமென ஓ பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version