வீடியோ
பக்கிரி படத்தின் மாயாபஜாரு வீடியோ பாடல் ரிலீஸ்!

இயக்குநர் கென் ஸ்காட் இயக்கத்தில் தனுஷ் நடித்த தி எக்ஸ்ட்ராடினரி ஜார்னி ஆஃப் ஃபகிர் படத்தின் தமிழ் ரீமேக்கான பக்கிரி படம் அடுத்த வாரம் ஜூன் 21ம் தேதி ரிலீசாகிறது. அந்த படத்தின் மாயாபஜாரு பாடல் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
கென் ஸ்காட் இயக்கத்தில் ஹாலிவுட் படமாக உருவாகியுள்ள இந்த படம், ஸ்பானிஷ் மொழியில் சிறந்த மக்கள் விருது படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த படத்தை இந்தியாவில் ரிலீஸ் செய்ய தனுஷ் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியடைந்துள்ள நிலையில், படம் அடுத்த வாரம் ரிலீஸ் ஆகிறது.
மதன் கார்க்கி லிரிக்கில் உருவாகியுள்ள மாயாபஜாரு பாடலுக்கு ஹாலிவுட் நடிகையுடன் தனுஷ் நடனமாடியுள்ள பாடல் வீடியோ படத்தின் புரமோஷனை கருத்தில் கொண்டு வெளியிடப்பட்டுள்ளது.