தமிழ்நாடு
சென்னையில் இருந்து கிளம்பிய சொகுசு கப்பலை திருப்பி அனுப்பிய புதுவை!
Published
8 months agoon
By
Shiva
சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சென்னையில் இருந்து சொகுசு கப்பல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதும் சென்னையில் இருந்து புதுவை செல்லும் இந்த கப்பல் கடந்த சனிக்கிழமை அன்று சென்னை துறைமுகத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார் என்பதும் தெரிந்ததே.
இந்த சொகுசு கப்பல் சென்னை துறைமுகத்தில் இருந்து புதுச்சேரி சென்று பிறகு மீண்டும் சென்னை துறைமுகம் வரும் வகையில் இரண்டு நாள் சுற்றுலா திட்டமாக இருந்தது.
அதேபோல் சென்னை துறைமுகத்தில் இருந்து விசாகப்பட்டினம் சென்று அங்கிருந்து புதுச்சேரி சென்று மீண்டும் புதுவையில் இருந்து சென்னை திரும்பும் வகையில் ஐந்து நாள் சுற்றுலா திட்டமாகவும் இன்னொரு திட்டம் உள்ளது.
இந்த நிலையில் கடந்த ஜூன் 4-ஆம் தேதி இந்த சொகுசு கப்பலை தமிழக முதல்வர் தொடங்கி வைத்த நிலையில் இந்த கப்பலை புதுவை கடலோர காவல் படையினர் திருப்பி அனுப்பி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுவை கடலோர காவல்படையிடம் அனுமதி பெற்று அதன் பிறகு வரும்படி அந்த சொகுசு கப்பலுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
You may like
-
தென்னிந்தியாவில் மேலும் 3 வந்தே பாரத் ரயில்கள்.. சென்னைக்கு உண்டா?
-
சென்னை மக்களுக்கு எச்சரிக்கை.. இதை செய்யலனா தண்ணீர் வராது.. உஷார்!
-
ஏர் இந்தியாவின் குடியரசு தின சலுகை… சென்னை-டில்லிக்கு கட்டணம் இவ்வளவுதானா?
-
ஒரே கல்லில் 3 மாங்காய்.. ஒரே நேரத்தில் ஸ்விக்கி, டன்சோ, ரேபிடோவில் வேலை பார்க்கும் சென்னை இளைஞர்!
-
மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இருந்து வேலைநீக்கம்: அமெரிக்காவில் உள்ள சென்னை இளம்பெண்ணுக்கு சிக்கல்!
-
சென்னை ஆறுகள் ‘அதிகாரப்பூர்வமாக இறந்துவிட்டன’.. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்!