தமிழ்நாடு

இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு.. மீண்டும் தொடர்மழை பெய்ய வாய்ப்பு!

Published

on

வங்க கடலில் டிசம்பர் 5-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் அது ஒரு சில நாட்களில் காற்றழுத்த மண்டலமாக மாறி புயலாக மாறும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் மீண்டும் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

rain கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு காரணமாக சீர்காழியில் வரலாறு காணாத மழை பெய்தது என்பதும் சென்னை உள்பட பல மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்தது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் மீண்டும் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அடுத்த 48 மணி நேரங்களில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும்.

டிசம்பர் 8ஆம் தேதி தமிழகத்தின் வட மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு புயலாக மாறுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதால் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

rainகேரள மாநிலத்தில் தோன்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்யும் என்றும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rainநாளை மற்றும் நாளை மறுதினம் தமிழக கடற்கரை மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் வரும் 8ஆம் தேதி இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்பதால் ஓரிரு இடங்களில் ஆரஞ்சு அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வரை 70 கிலோ மீட்டர் வரை காற்று வீசக் கூடும் என்பதால் இந்த பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

Trending

Exit mobile version