இந்தியா

2023ஆம் ஆண்டு.. வார இறுதி நாட்களுடன் கிடைக்கும் நீண்ட விடுமுறை நாட்கள்: முழு விபரங்கள்

Published

on

2022ஆம் ஆண்டு இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைந்து 2023 ஆம் ஆண்டை நாம் வரவேற்க இருக்கும் நிலையில் அடுத்த ஆண்டில் வார இறுதி நாட்கள் உடன் சேர்ந்து ஒரு சில நாட்கள் விடுமுறை எடுத்தால் நீண்ட விடுமுறை நாட்கள் கிடைக்கும் என்பது தெரியவந்துள்ளது.

அதாவது சனி, ஞாயிறு விடுமுறையுடன் சேர்த்து ஒருசில நாட்கள் விடுமுறை எடுத்தால் நீண்ட விடுமுறை கிடைக்கும். உதாரணமாக டிசம்பர் 31, ஜனவரி 1 சனி ஞாயிறு விடுமுறை வரும் நிலையில் திங்கள் விடுமுறை எடுத்தால் நீண்ட விடுமுறை கிடைக்கும். அதேபோல் ஜனவரி 13ஆம் தேதி வெள்ளியன்று விடுமுறை எடுத்தால் பொங்கல் விடுமுறையுடன் நீண்ட விடுமுறை கிடைக்கும். அதேபோல் ஜனவரி 26 குடியரசு தினத்தின் விடுமுறையுடன் மறுநாள் வெள்ளி அன்று விடுமுறை எடுத்தால் சனி, ஞாயிறுடன் 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும்.

அதேபோல் பிப்ரவரி 17ஆம் தேதி விடுமுறை எடுத்தால் பிப்ரவரி 18 மஹா சிவராத்திரி மற்றும் ஞாயிறு விடுமுறை என 3 நாட்கள் விடுமுறை கிடைக்கும்.

மார்ச் மாதத்தில் 8ஆம் தேதி ஹோலி பண்டிகை வருவதை அடுத்து 9, 10 ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்தால் 8 முதல் 12 வரை 5 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்பதும் இந்த ஐந்து நாட்களில் வெகு தூரத்துக்கு சுற்றுலா செல்லலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் மார்ச் 30ஆம் தேதி ராமநவமி வருவதை எடுத்து அதற்கு அடுத்த நாள் வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் விடுமுறை எடுத்தால் மார்ச் 30 முதல் ஏப்ரல் 2ஆம் தேதி வரை நான்கு நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் மாதத்தில் ஏப்ரல் 1 மற்றும் 2 சனி ஞாயிறு விடுமுறை கிடைப்பதை அடுத்து ஏப்ரல் 3ஆம் தேதி மட்டும் விடுமுறை எடுத்தால் ஏப்ரல் 4ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி உடன் சேர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கும். அதேபோல் ஏப்ரல் 7 ஆம் தேதி புனித வெள்ளி வருவதை அடுத்து ஏப்ரல் 8 ஏப்ரல் 9 என மூன்று நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மே மாதத்தை பொறுத்தவரை மே 5ஆம் தேதி புத்த பூர்ணிமா விடுமுறையை அடுத்து சனி, ஞாயிறான 6, 7 ஆகிய மூன்று நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூன் 19ஆம் தேதி மட்டும் விடுமுறை எடுத்தால் சனி, ஞாயிறு மற்றும் ஜூன் 20ஆம் தேதி விடுமுறை நாள் என்பதால் ஜூன் 17 முதல் 20 என மூன்று நாட்கள் விடுமுறை கிடைக்கும். அதேபோல் ஜூன் 29-ஆம் தேதி பக்ரீத் திருநாள் அன்று விடுமுறை என்பதால் அதற்கு அடுத்த நாள் ஜூன் 30-ஆம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை எடுத்தால் ஜூன் 29 முதல் ஜூலை 2 வரை நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூலை மாதத்தில் 28ஆம் தேதி முகரம் விடுமுறை என்பதால் அதற்கு அடுத்த நாளான சனி ஞாயிறு விடுமுறை என்ற காரணத்தினால் மூன்று நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும்.

ஆகஸ்ட் மாதத்தில் 14ஆம் தேதி ஒரு நாள் மட்டும் விடுமுறை எடுத்தால் ஆகஸ்ட் 12 முதல் 15 வரை நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்பதால் சுற்றுலா செல்வதற்கு ஏதுவாக இருக்கும். அதே போல ஆகஸ்ட் 29-ஆம் தேதி ஓணம் பண்டிகை விடுமுறை, ஆகஸ்ட் 30 ரக்ஷாபந்தன் விடுமுறை இருப்பதால் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 மட்டும் விடுமுறை எடுத்தால் தொடர்ச்சியாக 6 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் மாதத்தைப் பொறுத்தவரை செப்டம்பர் 8-ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் விடுமுறை எடுத்தால் செப்டம்பர் 7-ஆம் தேதி ஜன்மாஷ்டமி விடுமுறையுடன் சேர்த்து 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும். அதே போல் செப்டம்பர் 18ஆம் தேதி திங்கட்கிழமை ஒரு நாள் மட்டும் விடுமுறை எடுத்தால் செப்டம்பர் 16ஆம் தேதி முதல் செப்டம்பர் 19-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வரை விடுமுறை 4 நாட்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்டோபர் மாதத்தில் 23 ஆம் தேதி மகா நவமி விடுமுறை மற்றும் 24ஆம் தேதி தசரா விடுமுறை மற்றும் சனி, ஞாயிறு சேர்த்து நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.

நவம்பர் 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஒரு நாள் விடுமுறை எடுத்தால் நவம்பர் 11 சனிக்கிழமை நவம்பர் 12 ஞாய்று என மூன்று நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும்.

டிசம்பர் மாதத்தை பொறுத்தவரை டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினம் வருவதால் டிசம்பர் 23, 24 சனி ஞாயிறு ஆகிய தினங்கள் உடன் சேர்த்து மூன்று தினங்கள் விடுமுறை கிடைக்கும்.

இவ்வாறு கிடைத்த விடுமுறையில் ஒவ்வொரு மாதமும் ஒரு நீண்ட சுற்றுலா செல்வதற்கு வசதியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version