சினிமா செய்திகள்
பிப்ரவரி 1,2,3… பெரிய சம்பவத்துக்கு ரெடியாகுங்க; இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொடுத்த தளபதி 67 ஹின்ட்!
வாரிசு படம் வெளியான உடனே தளபதி 67 படத்தின் அப்டேட் வரும் என சொல்லி எஸ்கேப் ஆன இயக்குநர் லோகேஷ் கனகராஜ் குடியரசு தினத்தை முன்னிட்டு அப்டேட் வெளியிடுவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு வெறும் ஹின்ட் மட்டும் கொடுத்து அடுத்த மாதம் வரை எஸ்கேப் ஆகி உள்ளார்.
இந்த மாதமே தளபதி 67 படம் தொடர்பான அப்டேட் வராது என்பது உறுதியான நிலையில், இன்று தனியார் கல்லூரிக்கு சிறப்பு விருந்தினராக சென்றிருந்த லோகேஷ் கனகராஜ் பிப்ரவரி 1,2,3 தேதிகளில் தளபதி 67 அப்டேட் வரும் என ஹின்ட் கொடுத்துள்ளார்.

#image_title
ஒரு தேதி மட்டுமில்லாமல் 3 தேதிக்களை அவர் சொல்லி உள்ள நிலையில், தொடர்ந்து 3 நாட்களும் வித விதமான அப்டேட்களாக வருமா என விஜய் ரசிகர்கள் மனக்கோட்டை கட்டி வருகின்றனர்.
நடிகர் விஜய்யை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய புதிய ப்ரோமோ வீடியோ எடிட் செய்யப்பட்டு வெளியாக தாமதம் ஆன நிலையில் தான் தளபதி 67 படத்தின் அப்டேட் தள்ளிப் போயுள்ளதாக கூறுகின்றனர்.

#image_title
இந்த படம் முழுக்க முழுக்க 100 சதவீதம் லோகேஷ் கனகராஜ் படமாகவே வரும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். மாஸ்டர் படத்தை போல கிளைமேக்ஸ் காட்சியில் விஜய் அம்பு விட்டு லாரிகளை எல்லாம் பறக்க விடமாட்டார் என எதிர்பார்க்கலாம். அதற்கு பதிலாக பெரிய பீரங்கி உடன் விஜய் எதிரிகளை துவம்சம் செய்ய வாய்ப்புகள் உள்ளன.