ஆரோக்கியம்
கல்லீரல் நோய்கள் குணமாக நிலவேம்பு!

நிலவேம்பு என்பது வீடுகளில், காட்டுப்பகுதிகளில் வெள்ளைநிற பூ பூக்கும் ஒருவகை செடியாகும். இதைக் கிராமத்தில் உள்ள மக்கள் சிறியாநங்கை செடி என்று கூறுவார்கள். இந்த செடியானது அதிக கசப்பு தன்மை கொண்டது. இந்த மூலிகை மூலம் பலவிதமான நோய்களைத் தீர்க்க முடியும்.

மூலிகை மருத்துவத்தில் பயன்படும் செடியாகும். கசப்புச் சுவையுடையதான இதன் இலையும் தண்டும் மருத்துவ குணமுடையவையாகும். இச்செடி இரண்டு முதல் மூன்று அடிகள் வரை நிமிர்ந்து வளர்கிறது. நிலவேம்பு என்பது ஒரு முக்கியமான மூலிகையாகும்.

#image_title
வெப்பம் அதிகமுள்ள இடங்களில் சிறப்பாக விளைகிறது. மே மற்றும் சூன் மாதங்களில் விதைகளைப் பரப்புகிறது. 60 செ.மீ இடைவெளியில் நில வேம்பு விளைவிக்கப்படும் போது, நல்ல விளைச்சலைத் தருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

நிலவேம்பு முழு தாவரத்தையும் நீர்விட்டு, கொதிக்கவைத்து 30மி.லி வீதம் காலை, மாலை இருவேளையும் மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் காய்ச்சல் குணமாகும். நிலவேம்புக் குடிநீர் உட்கொள்ள சுரம், நீர்க்கோவை, வயிற்றுப் பொருமல், குளிர்காய்ச்சல் போன்ற நோய்கள் குணமாகும்.
இது காய்ச்சல், தலைவலி, உடல்வலி மற்றும் சோர்வு ஆகிய பிரச்சனைகளைச் சரி செய்ய உதவுகிறது. டெங்கு மற்றும் கொரோனா போன்ற வைரஸ்களில் இருந்து விலகி இருக்க ஒரு நாளைக்கு இரண்டு முறை 60 மி.லி நிலவேம்பு கஷாயத்தைக் குடிக்கலாம் எனக் கூறப்படுகிறது.
தீராத காய்ச்சல், டெங்குகாய்ச்சல், மலேரியா காய்ச்சல், சிக்குண் குனியா காய்ச்சல், பன்றிக்காய்ச்சல், தோல் நோய், தலையில் நீர்க்கோவை, பித்தமயக்கம், மூட்டு, உடல் வலி மற்றும் பால்வினை நோய் உள்ளிட்ட பெரும்பாலான நோய்களைத் தீர்க்க முடியும்.

நிலவேம்பைச் சாறு எடுத்து அரை டம்ளர் வீதம் 3 நாட்கள் காலை, மாலை குடித்து வந்தால் கல்லீரல் தொடர்பான நோய்கள் குணமாகும். குடலில் புழுக்கள் இருந்தால் வெளியேறி, உடல் வலுவடையும்.

#image_title
நிலவேம்பு கஷாயத்தில் கல்லீரல் வீக்கத்தைக் குறைக்கும் ஆற்றல் உள்ளது. நிலவேம்பு கஷாயப் பொடியில் வெறும் நிலவேம்பு மட்டும் இருப்பதில்லை. அதனுடன் வெட்டி வேர், கோரைக்கிழங்கு, கருப்பு மிளகு, இஞ்சி போன்ற பல்வேறு மூலிகைகள் சேர்க்கப்படுகின்றன.
இது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இந்த மூலிகையானது பழங்காலம் முதலே சித்த மருத்துவத்தில் பயன்பாட்டில் உள்ளது. நிலவேம்பு இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவுகிறது. அடிக்கடி சுண்டைக்காய் சாப்பிட்டு வர ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும்.
புளியமரப்பூ, உப்பு, மிளகாய், தேங்காய் இவற்றைச் சேர்த்து அரைத்து சட்னி தயாரித்துச் சாப்பிட்டால் இருமல் குணமாகும். நிலவேம்பில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகளின் வளமான ஆதாரங்கள் காரணமாக மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க முடியும். மேலும் முடக்குவாதத்தைச் சரிசெய்ய இது உதவியாக இருக்கிறது.
கத்திக்காய் அரைத்து வீக்கம் உள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால் வீக்கம் குணமாகும். செரிமான சக்திக்குப் பெயர் பெற்ற மூலிகையாக நிலவேம்பு உள்ளது. வாயு பிரச்சனைகள், மலச்சிக்கல், வீக்கம், புண்கள் மற்றும் வயிற்று வலி ஆகியவற்றைச் சரி செய்ய இது உதவுகிறது. குறிப்பாகச் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அடிக்கடி ஏற்படும் மலச்சிக்கலுக்கு இந்த நிலவேம்பு மிகச்சிறந்த மருந்தாகச் செயல்படும்.
நிலவேம்பு இதயத் தசைகளை வலுப்படுத்துவதன் மூலம் இதயத்தைப் பாதுகாக்கிறது. மேலும் இது உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. இது புற்றுநோயை எதிர்த்துப் போராடவும் கல்லீரலின் நச்சுத்தன்மையைக் குறைக்கவும் உதவுகிறது.