இந்தியா

எல்.ஐ.சி ஐபிஓ விற்பனை இன்று தொடக்கம்: முதலீட்டாளர்கள் பெரும் ஆர்வம்!

Published

on

இந்திய ஐபிஓ வரலாற்றில் மிகப்பெரிய அளவில் பேசப்படும் எல்.ஐ.சி ஐபிஓ இன்று விற்பனைக்கு வரவுள்ளது. இதனையடுத்து முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எல்.ஐ.சி ஐபிஓ ரூ. 902 முதல் ரூ.949 ஒருவரை மத்திய அரசு விற்பனை செய்ய உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி எல்.ஐ.சி ஐபிஓ விற்பனை இன்று தொடங்க இருப்பதை அடுத்து முதலீட்டாளர்கள் பெரும் ஆர்வத்துடன் இதனை வாங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாலிசிதாரர்கள் மற்றும் எல்ஐசி ஊழியர்கள் சில்லறை முதலீட்டாளர்கள் ஆகியோருக்காக விற்பனை செய்யப்படும் எல்.ஐ.சி ஐபிஓ இன்று தொடங்கி மே 9-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

எல்ஐசி ஐபிஓ விற்பனை செய்யப்படுவதன் மூலம் 20 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த பங்கை வாங்குவதற்கு பொதுமக்கள் டீமேட் கணக்கு வைத்திருக்க வேண்டியது என்பது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள் எல்ஐசி பங்குகளை வாங்கலாம் என்றும் நம்பகத்தன்மையுடைய நிறுவனம் என்பதால் எதிர்காலத்தில் நல்ல லாபத்தைக் கொடுக்கும் என்றும் கூறி வருவதால் இந்த பங்கும் மிக வேகமாக இன்று முதல் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Trending

Exit mobile version