சினிமா செய்திகள்
ஹீரோ ஆனதுமே சிகரெட் புகை தான்! சூரியின் கொட்டுக்காளி டீசர் எப்படி?

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நடிகர் சூரி ஹீரோவாக நடிக்க உள்ள கொட்டுக்காளி படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான கூழாங்கல் படத்தை இயக்கிய இயக்குநர் பி.எஸ். வினோத் ராஜ் இயக்கத்தில் இந்த கொட்டுக்காளி படம் உருவாக உள்ளது.

#image_title
படத்தின் டைட்டில் அறிவிப்பு இன்று காலை வெளியான நிலையில், கொட்டுக்காளி படத்தின் இன்ட்ரோ டீசர் இன்று மாலை வெளியாகி தரமான படம் ஆன் தி வே என்பதை உணர்த்துகிறது.
வெற்றிமாறனின் விடுதலை படத்தின் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்துள்ள நடிகர் சூரி அடுத்ததாக சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அன்னா பென் நடிக்க உள்ளார். கொட்டுக்காளி டீசரில் சிலிர்ப்பி நிற்கும் சேவல் பக்கத்தில் வண்டியில் உட்கார்ந்து கொண்டு கிராமத்துப் பெண்ணாகவே மாறி இருக்கிறார் அன்னா பென்.

#image_title
மறு பக்கம் சிகரெட்டை பிடித்துத் தள்ளும் காட்சியில் நடிப்பின் நாயகனாகவே மாறிவிட்டார் சூரி. ஆனால், அதே நேரம் படத்தின் டீசரிலேயே புகைப்பிடிக்கும் காட்சியை வைத்து புகைப் பழக்கத்தை நடிகர் சூரி ஆதரிக்கிறாரா? என சமூக வலைதளத்தில் கண்டனங்களும் கிளம்பி உள்ளன.
ஹீரோ ஆன உடனே இப்படி சிகரெட் பிடிக்கும் காட்சிகளை வைப்பது சரி தானா? என்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.