கிரிக்கெட்

நாளைய போட்டியில் இருந்து கே.எல்.ராகுல் திடீர் விலகல்: புதிய கேப்டன் யார்?

Published

on

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நாளை முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி டெல்லியில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்திய அணி கேஎல் ராகுல் தலைமையில் விளையாட உள்ளது என்பதும் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடர்ச்சியாக 13வது போட்டியில் வெற்றி பெற்றது என்ற பெருமை கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று இந்தியா, தென்னாப்பிரிக்கா ஆகிய இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீரென இந்தியா அணியின் கேப்டன் ராகுலுக்கு காயம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதன்காரணமாக அவர் இந்திய அணியில் இருந்து விலகியுள்ளார். இதனை அடுத்து இந்திய அணியின் புதிய கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Trending

Exit mobile version