Connect with us

உலகம்

சிறுவனுக்கு உதட்டில் முத்தம்: மன்னிப்பு கேட்ட தலாய் லாமா!

Published

on

திபெத்திய புத்த மத தலைவரான தலாய் லாமா சிறுவன் ஒருவனுக்கு உதட்டில் முத்தமிட்டு பின்னர் தனது நாக்கை நீட்டி நாக்கில் முத்தமிட சொல்லும் வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரத்தில் தலாய் லாமா தற்போது மன்னிப்பு கேட்டுள்ளார்.

#image_title

வைரலாக பரவி வரும் இந்த வீடியோவில் மேடையில் அமர்ந்து இருக்கும் தலாய் லாமாவிற்கு மரியாதை செலுத்த சிறுவன் ஒருவன் அருகே வருகிறான். அந்த சிறுவனை பிடித்து உதட்டில் முத்தம் கொடுக்கிறார் ஆன்மீக தலைவர் தலாய் லாமா. இதனை தொடர்ந்து சில விநாடிகளுக்கு பின்னர் தனது நாக்கை வெளியே நீட்டி அதனை முத்தமிடுமாறு தலாய் லாமா சிறுவனிடம் வலியுறுத்துகிறார். இதற்கு மறுக்கும் சிறுவன், தலாய் லாமா தனது கையை பிடித்து இருந்ததால் வேறு வழியில்லாமல் அவரின் நாக்கில் முத்தமிட்டுவிட்டு சென்றுவிட்டான்.

தலாய் லாமாவின் இந்த செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தது. இது தலாய் லாமாவின் அத்துமீறல் என ஒரு தரப்பினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர், மற்றொரு தரப்பினர் தலாய் லாமா விளையாட்டாகவே சிறுவனுக்கு முத்தமிட்டார் என அவருக்கு ஆதரவாக கருத்துக்களை கூறிவருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார் தலாய் லாமா. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சிறுவனின் உதட்டில் முத்தமிட்டதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். சிறுவன், அவனின் குடும்பம், உலக நண்பர்கள், சகோதரர்களிடமும் மன்னிப்பு கேட்கிறேன். என்னுடைய செயல் காயப்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.

பொது இடங்கள், கேமராக்கள் முன்னிலையில் நான் சந்திக்கும் மக்களிடம் விளையாட்டுத்தனமான முறையில் அடிக்கடி கிண்டல் செய்வது போல, இப்போதும் இது நடந்து விட்டது என தெரிவித்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு, தனக்குப் பின் தலாய் லாமாவாக ஒரு பெண் வந்தால் அவர் மிக அழகாக இருக்க வேண்டும் என அவர் பேசியது சர்ச்சை ஆனது. பின்னர் தனது பேச்சுக்கு தலாய் லாமா மன்னிப்பு கேட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வணிகம்3 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?