தமிழ்நாடு

முதல்வர் நீண்ட விளக்கம் அளித்த போதிலும் கஸ்தூரியின் டுவிட் தேவையா? நெட்டிசன்கள் கண்டனம்

Published

on

விருதுநகர் அருகே பெண் ஒருவர் 8 பேர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் முதல்வர் இன்று சட்டமன்றத்தில் அதிரடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:

விருதுநகர் மாவட்டத்தில் 22 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்த புகார் வந்தவுடன் வழக்குப்பதிவு செய்து 24 மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். மீதமுள்ள 4 பேர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்

குற்றவாளிகள் விரைந்து தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்காக இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிபிசிஐடி கண்காணிப்பாளர் முத்தரசி சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு தனி நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்படும். விரைந்து குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும். அதிகபட்ச தண்டனை பெற்று தரப்படும் என்று முதல்வர் கூறியுள்ளார்

விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கு பொள்ளாச்சி வண்ணாரப்பேட்டை பாலியல் வழக்கு போலல்லாமல் விருதுநகர் வழக்கில் விரைந்து தண்டனை வாங்கி கொடுப்பதில் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிற்கே முன் மாதிரியாக இருக்கும் என்றும் இதுபோன்ற தவறு செய்பவர்களுக்கு ஒரு பாடமாக அமையும் என்றும் பொறுத்திருந்து பாருங்கள் என்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: பொள்ளாச்சிக்கும் அசிபாவுக்கும் பொங்கிய உடன்பிறப்புக்கள் விருதுநகர் விஷயத்தில் மௌனம் காப்பது ஏன்? பெண்ணின் மானம் காக்க கூட கட்சி பார்த்துதான் குரல் கொடுப்பீர்களா? ராகவன் ஜாதியை இழுத்தவர்கள் எங்கே, ஹரிஹரன், ஜூனைத் அஹமது , மாடசாமி முதலானோரின் சமூகத்தை பேசுங்க பாப்போம்? #expected

முதல்வர் இந்த அளவுக்கு விளக்கமளித்த பின்னரும் இந்த டூயட் தேவையா என நெட்டிசன்கள் கஸ்தூரிக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Trending

Exit mobile version