சினிமா செய்திகள்
‘மஹாபாரதம் படிச்சிருக்கீங்களா?’- சாட்டையை சுழட்டும் கார்த்தியின் ‘சுல்தான்’ டீசர்!
Published
2 years agoon
By
Barath
நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள ‘சுல்தான்’ திரைப்படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகி உள்ளது.
கார்த்தி கடைசியாக கைதி படத்தில் நாயகன் ஆக நடித்து பெரும் பாராட்டைப் பெற்றிருந்தார். அதன் பின்னர் நடித்த சுல்தான் படம் கொரோனா கட்டுப்பாடுகளால் தாமதம் ஆகிக் கொண்டே இருந்தது. படத்தை ஓடிடி-யில் வெளியிடுவதாக முதலில் அறிவித்த தயாரிப்பு நிறுவனம் தற்போது தியேட்டர் ரிலீசுக்குப் படத்தைத் தயார் செய்து வருகிறது.
சுக்தான் படத்தில் கார்த்தி-க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். தெலுங்கு, கன்னடம் மொழித் திரைப்படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு ராஷ்மிகா பரிச்சயம் ஆனவர் தான் என்றாலும் சுல்தான் படம் மூலமாகத் தான் தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆகிறார் ராஷ்மிகா மந்தனா. இந்தப் படத்தை சிவகார்த்தியேனின் ‘ரெமோ’ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இயக்கி உள்ளார்.
ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சுல்தான் திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் சுல்தான் திரைப்படம் திரை அரங்கங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#Sulthan, a honest effort to bring a complete family entertainer with humor, romance, action & strong man to man relationship. Hope you all like it ????????#SulthanTeaser– https://t.co/fkFTku1MxV@iamRashmika @iYogiBabu @Bakkiyaraj_k @iamviveksiva @MervinJSolomon#SulthanFromApril2
— Actor Karthi (@Karthi_Offl) February 1, 2021
You may like
-
ரோலக்ஸ் சாரை பார்ப்பதற்கு பயமாக இருந்தது: ‘விக்ரம்’ படம் குறித்து கார்த்டி
-
விடுமுறை நாளில் வெளியாகும் கார்த்தியின் ‘விருமன்’ திரைப்படம்!
-
லிங்குசாமியின் அடுத்த படம் ‘பையா 2’: ஆனால் கார்த்தி இல்லையாம்!
-
விஜய்யை அடுத்து அஜித்துடன் மோத முடிவு செய்த கார்த்தி: இதுதான் திட்டமா?
-
தமிழக முதல்வரை சந்தித்த நடிகர் சங்க நிர்வாகிகள்: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
-
கார்த்தியின் சர்தார்: இதுவரை இல்லாத மிகப்பெரிய பிசினஸ்!