சினிமா செய்திகள்
கார்த்தியின் சுல்தான்: ரிலீசுக்கு முன்பே ரூ.16 கோடி தயாரிப்பாளருக்கு லாபமா?
கார்த்தி, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’சுல்தான்’. இந்த படம் நாளை உலகம் முழுவதும் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்திற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தின் பட்ஜெட்டை விட வியாபாரம் ரூபாய் 16 கோடிக்கு அதிகம் செய்துள்ளதால் ரிலீஸுக்கு முன்னரே இந்தப் படம் ரூ 16 கோடி லாபம் அடைந்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, பாக்கியராஜ் கண்ணன் உள்ளிட்டோருக்கு உண்டான சம்பளம் மற்றும் படத்தின் பட்ஜெட் ரூபாய் 40 கோடி என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழக மற்றும் இந்திய ரிலீஸ் உரிமை, வெளிநாட்டு ரிலீஸ் உரிமை, சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமை, ஆடியோ ரிலீஸ் உரிமை, ஆகியவற்றின் மொத்த வியாபாரம் ரூபாய் 56 கோடிக்கு நடந்துள்ளதாகவும் இதனை அடுத்து இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு ரிலீசுக்கு முன்பே 16 கோடி லாபம் என்றும் கூறப்படுகிறது.
மேலும் தமிழகத்தில் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் நேரடியாக ரிலீஸ் செய்வதால் கமிஷன் அடிப்படையில் இந்த படம் கிடையாது என்பதால் 16 கோடி லாபம் என்பது தயாரிப்பாளருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக டிரேடிங் வட்டாரங்கள் கூறுகின்றன.