கிரிக்கெட்

ஐபிஎல் தொடரில் இருந்து திடீரென விலகும் கேன் வில்லியம்சன்: என்ன காரணம்?

Published

on

ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஐதராபாத் அணியின் கேப்டனாக செயல்பட்ட கேன் வில்லியம்சன் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றி பெற்று தனது அணியை 12 புள்ளிகளுடன் 8வது இடத்தில் வைத்து இருக்கிறார்.

ஆனால் அதே நேரத்தில் இன்னும் ஒரே ஒரு போட்டியில் அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் ஐதராபாத் அணி அடுத்த சுற்றுக்கு செல்ல வாய்ப்பு இருக்கும் நிலையில் திடீரென கேன் வில்லியம்சன் சொந்த நாடான நியூசிலாந்து செல்வதாகவும் அதனால் இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் மற்ற போட்டிகளில் தான் விளையாட வில்லை என்றும் கூறியுள்ளார்.

இந்த தகவலை ஹைதராபாத் அணியின் டுவிட்டர் பக்கத்திலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. கேன் வில்லியம்சன் மனைவி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் அவருக்கு குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே குழந்தை பிறக்கும் போது தனது மனைவியின் பக்கத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகவும் குழந்தையை பார்க்க வேண்டும் என்பதற்காகவும் கேன் வில்லியம்சன் நியூசிலாந்து செல்கிறார்.

பிளே ஆஃப் வாய்ப்பு மிகச் சிறிய அளவில் இருப்பதால் கேன் வில்லியம்சன் அடுத்து வரும் போட்டிகளில் இருந்து விலகி சொந்த ஊருக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Trending

Exit mobile version